தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகளில் இன்று மாலை தீப்பிடித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு சென்றதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்க, ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.