தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர், தற்போது இந்தியிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னாவும், இளம் நடிகை ராஷா ததானியும், நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, “பேபி” என்று ராஷா ததானி கூறியுள்ளார். இதனால், செல்லமாக கோபம் அடைந்த தமன்னா, “ஆண்டி என்று என்னை கூப்பிடு” என தெரிவித்து, தோளிலேயே தட்டினார்.
இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.