மகாதேவ் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட நிறுவனம், தற்போது பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, சில விசாரணை அமைப்புகள், அந்த நிறுவனத்தை விசாரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான Fairplay ஆப், கடந்த 2023-ஆம் ஆண்டின் ஐ.பி.எல். போட்டியை, சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்ததாக, புகார் ஒன்று எழுந்துள்ளது. இந்த புகாரில், தற்போது நடிகை தமன்னாவும் சிக்கியுள்ளார்.
அதாவது, இந்த செயலியை, நடிகை தமன்னா Promote செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் சைபர் பிரிவு அதிகாரிகள், நடிகை தமன்னாவுக்கு, சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில், வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று, மகாராஷ்டிராவின் சைபர் பிரிவு அதிகாரிகள் முன்பு, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஒரு சாட்சியாக, தன் தரப்பு வாக்குமூலத்தை கொடுப்பதற்காக, நடிகை தமன்னா அழைக்கப்பட்டுள்ளார்.
பாடகர் பாட்ஷா, சஞ்சய் தத் மற்றும் ஜாக்குலின் பெர்னான்டர்ஸின் மேனேஜர்கள் ஆகியோர், இந்த வழக்கு தொடர்பான தங்களது வாக்குமூலத்தை கொடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.