சமந்தாவின் வாய்ப்பை தட்டிப் பறித்த தமன்னா!

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என பலமொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ம்ம் சொல்றியா மாமா.. ஊஊம் சொல்றியா மாமா என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதே போன்றதொரு பாடல், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இதிலும், சமந்தாவே நடனம் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பதிலாக தமன்னா நடனம் ஆட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.