தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர் தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு, சமீபகாலமாக தொடர்ந்து, திருமணம் நடைபெற்று வருகிறது. நடிகை ஹன்சிகாவுக்கும், திருமணம் முடிவானதாக, சில நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை தமன்னாவிற்கும் திருமணம் நடக்க உள்ளதாம். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் தான் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், தகவல் பரவி வருகிறது.

இதுபோன்ற தகவல்கள் எப்போது பரவினாலும், அது வதந்தி என்று தமன்னா விளக்கம் அளிப்பார். ஆனால், இந்த முறை, எந்த விளக்கமும் அளிக்காததால், தகவல் உறுதி என்று கூறபட்டு வருகிறது.