Connect with us

Raj News Tamil

9 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகை!

சினிமா

9 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகை!

அஜித்தின் விடாமுயற்சி படத்தில், நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அந்த படத்தில் இருந்து அவர் விலகினார்.

அடுத்து யார் ஹீரோயினாக வருவார் என்று பலரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில், நடிகை தமன்னா தான், விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்கள் உற்சாகம் அடைய வைத்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு, வீரம் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top