தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர், தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக, இணையத்தில் தகவல் ஒன்று வெளியானது.
இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில், நடிகை தமன்னாவும், அவரது காதலர் விஜய் வர்மாவும், நேற்று ஹோலி பண்டிகையை சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும், தற்போது வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இருவரும் ஒன்றாக ஹோலி பண்டிகை கொண்டாடி இருப்பதால், இருவரும் பிரியவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
