தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. இவர், சமீப காலங்களாக, பல்வேறு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இன்னொரு பாலிவுட் படத்தில், கவர்ச்சி பாடலுக்கு அவர் நடனம் ஆடி உள்ளாராம். அதாவது, ரெய்டு என்ற பாலிவுட் படத்தின் 2-ஆம் பாகம், வரும் மே 1-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கவர்ச்சி பாடலில் தான், நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.