நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி.

இந்நிலையில் நேற்று இரவு டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News