ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் SS ஸ்டான்லி. இந்த படத்திற்கு பிறகு, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை, மெர்குரி பூக்கள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், மகாராஜா போன்ற படங்களில், சிறிய வேடங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, உடல் நலப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று இயற்கை எய்தினார். இவரது மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.