வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினருக்கு கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நியாய விலை கடைகள் மூலம் கம்பு, கேழ்வரம் உள்ளிட்ட சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்டுள்ளது.