கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 27,525 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 20,226 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 10,747 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.