கல்லூரி விழாவில் திடீரென கண்கலங்கிய அண்ணாமலை

கோவையில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் நடந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை ; மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை பற்றி பேசுவதற்காக இல்லை. என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களை பற்றி பேசுவதற்காகத்தான். என்னுடைய தாய், தந்தை இங்கே வந்திருக்கிறார்கள், அவர்கள் வந்துள்ள முதல் மேடை இதுதான் என பேசினார்.

அண்ணாமலை தனது பெற்றோரை குறித்தும், கல்லூரியில் சேர்ந்த நிகழ்வினை பற்றியும் விவரித்தபோது சில நொடிகள் கண்கலங்கினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News