தமிழக காங்கிரஸ், கடந்த 15-ஆம் தேதி கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தியது. அக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக, அக்கட்சியின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொது நாற்காலிகள், மேசைகள் உட்பட பல்வேறு பொருட்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது, ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டமன்ற தலைவர் செல்லவப்பெருந்தகை உள்ளிட்டோர் நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர்.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் எற்பட்டுள்ள நிலையில்,இவர்கள் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்க கூறி பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.