Connect with us

Raj News Tamil

தமிழ்நாடு அரசின் 2024–25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழகம்

தமிழ்நாடு அரசின் 2024–25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழ்நாடு அரசின் 2024–25 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை கடந்த15ஆம் தேதிவரை நடைபெற்றது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு 2024 – 25 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் வெளியாகவுள்ள 7 முக்கிய அறிவிப்புகள் பற்றிய ஒரு தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது மாபெரும் 7 தமிழ்க்கனவு என்ற தலைப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்கிற 7 தலைப்புகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, காத்திருங்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எனத் தெரிவித்துள்ளது.

எனவே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த 7 தலைப்புகளில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் எனவும், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல கவர்ச்சிகரமான பல்வேறு புதிய அறிவிப்புகளும் இதில் இடம்பெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

பொது பட்ஜெட், வேளாண்பட்ஜெட் தாக்கலை செய்யப்படுவதை தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதிலிருந்து இரண்டு பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. மறுநாள் 21 ம் தேதி தேதி காலை, மாலை என இரு வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து 22 ஆம் தேதியன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்க உள்ளனர் தொடர்ந்து, நிதி ஒதுக்கலுக்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு பேரவையில் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top