உலக நாடுகளின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 28 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த போட்டியில் பல்வேறு உலக நாடுகளின் செஸ் வீரர்கள் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்,என். ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செஸ் ஒலிம்பியாட் குறித்து பேசிய அவர், பிரதமருக்கு டம்மி பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திய தமிழக அரசை குற்றம் சாட்டினார். மேலும் பிரதமருக்கே இந்த நிலைமைனா.. சாமானிய மக்களின் நிலைமை என்ன..? கேள்வி எழுப்பியுள்ளார்.