Connect with us

Raj News Tamil

தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!

தமிழகம்

தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழக அரசு அழைப்பு..!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயங்கின. இன்றும் வழக்கம்போலவே பேருந்துகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 97.7 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றன. 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர பேருந்துகள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top