அனைத்துபள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தினம் தோறும் அனுப்பி வருகின்றனர். ஆனால் சில பள்ளிகள் அதனை சரியாக கடைபிடிக்கவில்லை என்று மாவட்ட சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்தி, சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News