74-வது குடியரசு தின விழா, இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றினார்.
இதேபோல், சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். இதையடுத்து, அங்கிருந்த நிகழ்ச்சி மேடையில் அமர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மேலும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.