Connect with us

Raj News Tamil

தமிழகமே எங்கள் குடும்பம்தான்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழகம்

தமிழகமே எங்கள் குடும்பம்தான்: உதயநிதி ஸ்டாலின்!

குடும்ப ஆட்சி என்று எங்களைக் குறை கூறுகிறார்கள், தமிழகமே எங்கள் குடும்பம்தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

வீரபாண்டியில் நடந்த இளைஞரணி செயல்வீரர் கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது:

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இது அமையும். ஆனால் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக அது அமைந்து விட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை.

பாஜக பின்னணியில் செயல்பட்ட அதிமுக ஆட்சிக்கு வந்த போது தான் நீட் தேர்வு வந்தது. இதுவரை 22 பேர் நீட்தேர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய இரண்டு முறை மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது நீட் விலக்கை மக்கள் இயக்கமாக மாற்ற 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க இருக்கிறோம். அதை சேலம் மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைப்போம். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று கூறிய பாஜக, அதைச் செயல்படுத்தவில்லை.

ஆனால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். குடும்ப ஆட்சி என்று எங்களைக் குறை கூறுகிறார்கள். தமிழகமே எங்கள் குடும்பம்தான். அந்த அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. பாஜக உடனான கூட்டணி முறிவு என்று அதிமுக கூறுவது நம்ப முடியாத வெறும் நாடகம் இவ்வாறு அவர் பேசினார்.

More in தமிழகம்

To Top