Connect with us

Raj News Tamil

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்: கவர்னர் ஒப்புதல்!

தமிழகம்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்: கவர்னர் ஒப்புதல்!

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்ட 2023 மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்ய்யப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அன்றைய தினமே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தற்போது கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில் நீர்நிலை இருந்தாலும் அந்த பகுதியில் தொழில்துறை திட்டம் தொடங்க இந்த சட்டம் வழிவகை செய்யும். ஒட்டுமொத்த நீர் சேமிப்பு, நீரோட்டம் குறைக்கப்பட மாட்டாது என்ற உறுதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என கருதினால் அரசு நிபுணர் குழுவை அமைக்கும். 4 அரசு அதிகாரிகள், அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுசூழல் நிபுணர் குழு மக்களிடம் கருத்துக்கேட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, உள்ளீடுகளுடன் கூடிய வரைவு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் குழு சமர்ப்பிக்கும். மாவட்ட ஆட்சியர் இந்த வரவை மாவட்ட அரசிதழில் வெளிடுவார். யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சியருக்கு தெரியப்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. 30 நாட்களுக்கு பிறகு ஆட்சியர் அனைத்து உள்ளீடுகளுடன் கூடிய வரவை அரசுக்கு அனுப்பி வைப்பார். இதன்பின் மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் ஒப்புதல் அல்லது நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top