கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் நகமுராவுடன் குகேஷ் மோதினார்.
நகமுராவுடன் மோதிய போட்டி டிரா ஆனதால் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று குகேஷ் சாம்பியன் ஆனார்.
இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார்.
இதேபோல் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.