அண்ணாமலையால் கீழ்த்தரமாகும் தமிழக அரசியல்..!

திமுக அரசு தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சி செய்துகிறது எனக்கூறி, பாஜக சார்பில் கடலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அண்ணாமலையிடம் பேட்டி எடுக்க, மைக்கை நீட்டியபடி ஓடிவந்த பத்திரிகையாளர்களை, ஏன் மரத்தின் மேல் குரங்கு தாவுவது போல் சுற்றிவருகின்றீர்கள் என கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

இதற்கு பத்திரிக்கையாளர்கள்,எதிர்கட்சிகள் போன்ற பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் தமிழக அரசியலில் தரக்குறைவான வார்த்தைகளால் தரம் தாழ்ந்த அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார் என கூறிப்பிட்டு வருகின்றனர்.