தமிழகத்தில் மீண்டும் வெளுத்துவாங்கப்போகும் கனமழை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 4 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வரும் 5 ஆம் தேதி குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளைய தினம் தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.