காசியில் தமிழ் சங்கமம்.. வேட்டி சட்டையில் கலக்கும் பிரதமர் மோடி..!

உத்திரபிரதேசம் மாநிலம் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரத் தொடர்பை புதுபிக்கும் நோக்கில் வாரணாசில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மத்திய அரசும், உத்திரபிரதேச அரசும் இணைந்து நடத்தும், இந்நிகழ்ச்சியை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும் வாரணாசி சென்றுள்ள தமிழக உயர்மட்டக் குழுவுடன் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் கவிஞர் பாரதியின் மருமகன் கேவி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் காசியில் தான் பாரதிக்கு ஆன்மீகம் மற்றும் தேசியத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது என்றார்.