விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சமீபத்தில், த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.