கடந்த மாதம் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் பெயர் அறிவித்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலியை உருவாக்கியுள்ளார். அதில் முதல் நபராக தனது பெயரை பதிவு செய்து வீடியோ வெளியிட்டார் விஜய்.
இந்நிலையில் 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.