ஊழலுக்காகவும், தேச விரோதத்திற்காகவும், 2 முறை கலைக்கப்பட்டது திமுகவின் ஆட்சி தான் என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை, ஆளுங்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் பேசும்போது, கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், “எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள்.
ஆனால், 2026-ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும், திராவிட மாடல் ஆட்சி தான்” என்று கூறியிருந்தார். இதுமட்டுமின்றி, தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட்-ஆஃப் கண்ட்ரோல் தான் என்றும் விமர்சித்திருந்தார்.
இதற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசும்போது, “அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்ததில் இருந்து, முதலமைச்சர் பதற்றமாக இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார். மேலும், “ஊழலுக்காகவும், தேச விரோதத்திற்காகவும், 2 முறை கலைக்கப்பட்டது, திமுகவின் ஆட்சி தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.