தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் – அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
கடந்த முறை போல அல்லாமல், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக களமிறங்கியிருப்பதும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்சென்னையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிமுக, பாஜக, திமுக என 3 கட்சிகளுமே ஏற்படுத்திய நிலையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். காலை 11.30 மணி நிலவரப்படி, 27029 வாக்கு வித்தியாசங்களில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக பாஜக 51406 வாக்குகளையும் பெற்றிருக்கிறது.. அதிமுக 25758 வாக்குகளை பெற்று 3வது இடத்திலேயே உள்ளது.. 11812 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.