12 மணி நேர வேலையால் மனித சக்தி அதிகரிக்கும்…தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து

12 மணி நேர வேலை நேரம் என்ற் சட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, முதலமைச்சர் சுமூக முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது : “12 மணி நேர வேலை மனித சக்தி அதிகரிக்கும்” அதிக நேரம் வேலை செய்து விட்டு அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை.
12 மணி நேர வேலை விவகாரத்தை தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது. என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News