தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில், அமலாக்கத்துறையினர், சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது.
இவ்வாறு இருக்க, இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த இந்த போராட்டத்தில், பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.