சசிகலா புஷ்பா வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் : கார் கண்ணாடி உடைப்பு..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவர்களின் ஒருவருமான சசிகலா புஷ்பா நேற்று பா.ஜ.க.சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற சசிகலா புஷ்பா மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

திமுக அமைச்சர் கீதா ஜீவன் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசி வருவதாகவும் அவர் வெளியில் வருவதற்கு கால்களும் பேசுவதற்கு நாக்கும் இருக்காது என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறும் கட்சி விழாவுக்காக சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடு முழுவதும், கண்ணாடி, பூந்தொட்டிகள், சேர் என பல பொருட்கள் சேதமடைந்துள்ளது. திமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.