2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை வாயிலாக தமிழக அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் டாஸ்மாக் வசூலை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு இதே மார்ச் மாத காலகட்டத்தில் மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்பட்டது. விலையேற்றம் ஒரு புறம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.