பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பா.ரஞ்சித் க்கு நன்றி, ஒரு நடிகனாக சிறந்த அனுபவங்களை பெற்றேன். நல்ல மனிதர்களுடன் செலவிட்டதால் 118 நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் இப்படத்தின் முதல் நாள் மற்றும் இறுதி நாள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.