மகன் வயது ஆணுடன் காதல் – ஓட்டம் பிடித்த பெண்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் லலிதா(40 வயது). இவரது கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தனது மகன்கள் இரண்டு பேருடன் லலிதா வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி அன்று, லலிதா வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

மேலும், வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளும் காணாமல் போனதால், மகன்கள் இருவரும் தாயை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையே, திடீரென கணவனை செல்போனில் அழைத்த லலிதா, தான் தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும், கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளதாகவும், 5 வருடமாக இருவரும் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, லலிதா கர்ப்பமாக இருப்பதால், திருமணம் செய்துக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த லலிதாவின் மகன்கள், தனது தாய் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள காதல் ஜோடியை தேடி வருகின்றனர். லலிதாவின் காதலருக்கு, 25 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News