அருள்நிதி நடிப்பில் உருவான கே 13 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பரத் நீலகண்டன்.
இந்த படத்திற்கு பிறகு, வேறு எந்த படத்தையும் எடுக்காமல் இருந்த இவர், தற்போது நடிகை டாப்சியை வைத்து, புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளார்.
அலையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம், ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.