தூத்துக்குடியில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்கள் வெளிவர முடியாமல் இருந்த நிலையில் இன்று ஒரு சில பகுதியில் மழை நீர் வடிய தொடங்கின.
கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மதுபான கடை மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. மது பிரியர்கள் மதுகளை வாங்க வரிசையில் நின்றும் முண்டி அடித்து கொண்டு வாங்கி சென்றனர்.