டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றமில்லை; கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை!

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை; மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி ஜூலை 10 தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம். அதில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90 எம்.எல். பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News