திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டியில் இயங்கி வரும் மதுகடையில் நேற்று (நவ.6) இரவு திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எனக் கூறி பால் பாண்டி என்பவர் குடிபோதையில் ஓசியில் மதுபானம் கேட்டு கடையின் முகப்பில் உள்ள இரும்பு கம்பி வலையை உடைத்துக் கொண்டு ஊழியரை தாக்க முயற்சித்து இருக்கிறார்.
சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் இரும்பு வலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தங்களையும் பாதுகாத்துக் கொண்டனர். மேலும் குடிபோதையில் இருந்த பால்பாண்டி தகாத வார்த்தைகளால் திட்டி ஊழியர்களை வசை பாடி உள்ளார்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.