ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தின் இறுதி கட்ட தேர்தல் பிரசார ஊர்வலத்தில் கை களை தூக்கி டாட்டா காட்டி அதிமுக – ஓபிஎஸ் நிர்வாகிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற மக்களவை தொகுதி யில் பிஜேபி கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று ராமநாதபுரம் நகரில் கூட்டணி கட்சியினர்களுடன் ஊர்வலமாக சென்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகே உள்ள அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளின் தேர்தல் அலுவலகம் வழியாக ஊர்வலம் சென்ற போது
அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை பார்த்து ஓ.பன்னீர் செல்வத்தின் நிர்வாகிககள் கைகளை அசைத்து மகிழ்ச்சியுடன் டாட்டா காட்டினர்.
பதிலுக்கு அதிமுக நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து டாட்டா காட்டினர்.