ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு: மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேலும் ஒரு எம்.எல்.ஏ கைதாகியிருப்பது, மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் ஏற்கனவே கைதான, முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற

உறுப்பினரான மாணிக் பட்டாச்சார்யா பெயரும், இந்த முறைகேட்டில் அடிப்பட்டது.
இதனால், மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக கைது செய்தது.

அவரை 14 நாட்கள் அமாலக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த முறைகேட்டில், ஆளும் கட்சியை சேர்ந்த இரண்டாவது நபர் கைதாகியிருப்பதால், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.