விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி அன்று, ஜன நாயகன் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்றும், கூறப்படுகிறது.