ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை..!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை வசிப்பவர் ஷாஜகான். இவரது 22 – வயது மகன் சல்மான் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். பொழுது போக்காக, தனது செல்போனில் மூலம் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்த இவர், இதற்கு அடிமையாகி, தனது நண்பர்களிடம் கடனாக பணம் பெற்று விளையாடியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சூதாட்டத்தால் பணத்தை இழந்த சல்மான், வேதனையில் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கிணத்துக்கிடவு போலீசார், சல்மான் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News