பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நேற்று மதியம் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 90 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று தெஹ்ரிக் – இ – தலிபான் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
தலைவனை கொன்றதற்கு பழிக்கு பழியாக இந்த மசூதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தலிபான்கள் என அறியப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்குமாறு ராணுவத்துக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.