ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சில தினங்களுக்கு முன் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் அந்த இ.மெயிலில், “எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவர் விடுத்த கொலை மிரட்டலில், “நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தொடர்ந்து 5 முறை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.