நாடு முழுவதும் 74ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கம்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் தமிழிசை ராஜ்பவனில் உள்ள தர்பார் அரங்கின் முன் தேசிய கொடியை பறக்கவிட்டார். இந்த நிகழ்வை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர் ராவுக்கும் மத்திய பாஜகவுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. பிரதமர் மோடியின் தெலங்கானா வருகையின் போது கூட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார். இதே போல இன்று நடைபெற்ற ஆளுநரின் குடியரசு தின விழாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.