தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் 9 மணிக்கு வாக்குபதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 69 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.