பெண் IAS அதிகாரியை பதற வைத்த துணை தாசில்தார்.. நள்ளிரவில் ஏற்பட்ட பரபரப்பு!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் செயலாளராக பணியாற்றி வருபவர் சுமிதா சபர்வால். பெண் IAS அதிகாரியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.

இதனை அறிந்த சுமிதா சபர்வால், தனது பாதுகாவலருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த மர்ம நபர் சிக்கினார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறேன் என்றும், பதவி உயர்வு பெறுவதற்காக சுமிதாவை பார்க்க வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரையும், அவருடன் வந்திருந்த நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவில் பெண் IAS அதிகாரி வீட்டில், துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News