தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூரில் தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகனும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் ரோட் ஷோ சென்றபடி வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வண்டியின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் அமைச்சர் கே.டி.ராமாராவ், ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் ரெட்டி, எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி ஆகியோர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இருப்பினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை தனது உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கேடிஆர் தெரிவித்தார்.
திடீர் பிரேக்…வாகனத்திலிருந்து குப்புற விழுந்த அமைச்சர் கே.டி.ஆர்https://t.co/UkDqaOmBzq#RajNewsTamil #TelanganaElections2023 #AssemblyElections2023 #Telangana #KTRRao #TamilNews #LatestNews #TodayNews #NewsUpdate
— Raj News Tamil (@rajnewstamil) November 9, 2023