Connect with us

Raj News Tamil

பா.ஜ.க. வேட்பாளரின் கழுத்தை நெரித்த எம்.எல்.ஏ….விவாத நேரலையில் பரபரப்பு

இந்தியா

பா.ஜ.க. வேட்பாளரின் கழுத்தை நெரித்த எம்.எல்.ஏ….விவாத நேரலையில் பரபரப்பு

தெலுங்கானாவில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி எம்எல்ஏ விவேகானந்துக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடாவுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.

ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த எம்எல்ஏ விவேகானந், பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்தார். பின்னர் போலீசாரும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர்.

இந்த வீடியோவை மாநில பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top